பிலிப்பியர் 2: 17-18
ஊற்றப்படுத்தல்
கிறிஸ்துவின் நாளுக்காக பவுல் எதிர்பார்த்தார், அந்த நாளை அவர் பார்க்க விரும்பினார்
மற்றும் அவருடைய வேலை பலனளிக்கிரதை அறிய விரும்பினார்.
பிலிப்பியர்கள் கர்த்தருடன் தொடர்ந்து நடந்தால் மட்டுமே இது அவருக்கு உறுதியாக தெரியும்.
யூதர்கள் தங்கள் தகனபலிகளை செலுத்தும் போது அதனோடு போஜனபலியையும்,
பானபலியையும் செலுத்துவது போல் பவுல் குறிப்பிடுகிறார் (எண் 15: 4-5; 28: 7)
அவர் தான் ஊற்றப்படுவார் என்று கூறுகையில் அவருடைய மரணதண்டனை தவிர்க்க
முடியாததாக இருக்கும் என்று விளங்குகிறது.
பவுல் தனது சாத்தியமான மரணம் எப்படி இருக்கும் என்று எதிநோக்கி இருந்தார் மற்றும்
பிலிப்பியர்கள் அவரோடு சேர்ந்து களிகூர்ந்து மகிழ எதிர்பார்த்தார்.
அவருடைய மரணம் கர்த்தருக்கு மகிமை உண்டாகும் ஒன்றாக பார்க்கும்படி அவர்
பிலிப்பியர்களிடம் கேட்கிறார்.
பவுலின் வாழ்க்கை ஜீவனானாலும் மரணமானாலும் இயேசு கிறிஸ்துவுக்காக பலியாக
இருக்கப்போகிறது.
இதுவே பவுலுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளித்தது மற்றும் பிலிப்பியர்கள் அதே
அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இந்த மகிழ்ச்சி சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல உண்மையில் மாறாக,
இயேசு கிறிஸ்துவுக்கு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை அடிப்படையாகக்
கொண்டது.
எபிரெயர் 12: 2 கூறுகிறது, அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு,
அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின்
வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
நமக்கு முன்னோடியும் நமது நம்பிக்கையின் பரிபூரணராகவும் இருக்கும் இயேசுவின் மீது நாம்
கண்களை ஏறெடுக்க வேண்டும்.
அவருக்கு முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷம் என்ன?
அவரது வாழ்க்கை நிறைவேறும், மேலும் அவர் தனது பிதாவுடம் மீண்டும் இணைவார்
என்பதை அறிந்த அவர் சிலுவையை சகித்தார்.
நமது விசுவாசத்தின் மீது பான பலியாக தனது இரத்தத்தை ஊற்றினார் இப்போது
ஜெயத்தோடு சிங்காசனத்திலே உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
அதேபோல், மற்றவர்கள் கர்த்தரை அறியவும் நற்செய்திக்காகவும் நம் வாழ்க்கையை
ஊற்றுவோம்.
ஜெபிப்போம்:
கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக உம் வாழ்க்கையை ஊற்றுநீர்.
உம்முடைய நோக்கம் என்னிடமும், என்னைச் சுற்றியுள்ளவர்களிடமும் உங்கள் வாழ்க்கையை
வெளிப்படுத்துவதாகும் என்பதை அறிந்து நீர் எனக்காக வைத்திருக்கும் காரியங்களை
பொறுமையுடன் தாங்கிக்கொள்ள உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்