பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

https://anchor.fm/s/3293f9a4/podcast/rss
1 Followers 134 Episodes Claim Ownership
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்

Episode List

பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 24 நினைவு வந்தது

Sep 8th, 2022 7:12 PM

கண்ணைத் திறக்க முடியாத வானதி, குந்தவை தேவியும், குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த வாலிபரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்கிறாள். இளவரசர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார் என்ற செய்தியை வானதி கேட்கிறாள். இராஜ்யம் ஆளப்பிறந்தவர்கள் இராஜ குலத்திலே பிறந்தவரை கலியாணம் செய்ய வேண்டும் என்று குந்தவை வந்தியத்தேவனிடம் விவாதம் செய்கிறாள். வானதி கண் விழிக்கும் சமயத்தில் ஆழ்வார்க்கடியான் அங்கு பிரவேசிக்கிறான்.

பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 23 வானதி

Sep 7th, 2022 10:11 PM

கொடும்பாளூர் இளவரசியின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடும் வர்ணனைகள். வானதியின் சுபாவத்துக்குக் பிறந்த வேளையும் வளர்ந்த காலமும் என்ற ஊகித்தலின் விளக்கம். வானதி பழையாறை அரண்மனைக்குப் போனபிறகு குந்தவைதேவியின் அன்பினால் அவளின் வாழ்க்கையிலும், மனப்போக்கிலும் ஏற்பட்ட மாற்றம். பொன்னியின் செல்வரிடம் வானதியின் உள்ளம் சென்ற விஷயம். பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கிய செய்தி கேட்ட வானதி தண்ணீரிலே விழ்கிறாள். குந்தவை வானதியின் மூர்ச்சையைத் தெளிவிக்கிறாள்.

பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 22 "அது என்ன சத்தம்?"

Sep 2nd, 2022 1:49 AM

வந்தியத்தேவனை படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவையிடம் விட்டுவிட்டு ஆழ்வார்க்கடியான் வந்தவழியாக திரும்பிச் செல்கிறான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்த வந்தியத்தேவன் தன்னையே மறந்து நிற்கிறான். குந்தவை, வந்தியத்தேவனிடம் போன காரியம் என்ன ஆயிற்று என்று வினவுகிறாள். அச்சமயம் பயங்கரமான சத்தம் கேட்டு அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் சத்தம் வந்த திசையை நோக்குகிறார்கள்.

பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 21 "நீயும் ஒரு தாயா?"

Sep 1st, 2022 12:00 AM

சோழ நாட்டின் பாரத்தை கண்டராதித்த தேவர் வகிக்கும்படியாக நேர்ந்த கதையும், சுந்தர சோழர் இளவரசுப் பட்டம் கட்டிய கதையும், சுந்தர சோழரின் சந்ததியர்கள் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்ற வாக்கையும் செம்பியன் தேவி கூறுகிறார். பிறகு சோழ குலத்துச் சிம்மாசனத்தில் மதுராந்தகன் ஏற ஆசை கொண்டதைப் பற்றி கேள்வி கேட்கிறார். மதுராந்தகன் சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும், பழுவேட்டரையர்களும் தன் பக்கம் இருப்பதை தாயிடம் கூறுகிறான். இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஆரவாரம் கேட்டு பெருமூதாட்டி விஷயம் தெரிந்து வர செல்கிறாள்.

பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 20 - தாயும் மகனும்

Aug 30th, 2022 11:56 PM

செம்பியன் மாதேவி மதுராந்தகனை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், தன்னுடைய கதையையும், கண்டராதித்த தேவரை மணந்த வரலாற்றையும் கூறுகிறார்.

Get this podcast on your phone, Free

Create Your Podcast In Minutes

  • Full-featured podcast site
  • Unlimited storage and bandwidth
  • Comprehensive podcast stats
  • Distribute to Apple Podcasts, Spotify, and more
  • Make money with your podcast
Get Started
It is Free