இதுவரை திருக்குறளின் அறத்துப்பாலில் இருத்து 38 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியிலிருந்து பொருட்பால் ஆரம்பமாகிறது. திருக்குறளின் 39வது அதிகாரம் இறைமாட்சி.
இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவர்களைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடமைகள், திறமைகள் பற்றிச் சொல்கிறது.