பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட வாஸந்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.