சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் பணியாற்றினார். இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன இவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒரு சோஷியலிசவாதி. இவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் இவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் இவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் இவர் ஒரு விபத்தில் காலமானார்