திருக்குறளின் அவா அறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.
அவா அறுத்தல் என்றால் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க, ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.