இந்த பாசுரத்தில் தூக்கத்தில் குதூகலித்திருக்கும் கோபிகையை எழுப்புகிறார்கள். பொழுது விடிந்ததற்கான அடையாளமாகக் கீழ் வானம் வெளுத்து விட்டது, எருமைகள் சிறுவீடு மேயப் புறப்பட்டு விட்டன தேவாதி தேவனைக் காண எல்லாரும் சென்று கொண்டு இருக்கிறார்கள். நாமும் புறப்புட்டு செல்ல வேண்டும். எனவே அங்கு போகின்றவர்களை நாம் நிற்கச் சொல்லி இருக்கிறோம். கண்ணனால் விரும்பப்படுபவள் நீ. நீ இன்றி அவன் முகத்தை நாம் காண இயலாது. எனவே எழுந்து வா கண்ணபிரானின் புகழைப் பாடி அவனிடத்தை அடைவோம் என்று பொருள் தரும் இந்த பாசுரத்தில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.