பிலிப்பியர் 2: 25-30
மனஉருக்கமுள்ள நண்பர்
பிலிப்பியிடமிருந்து பரிசைக் கொண்டு வந்தவரும், இந்த அற்புதமான கடிதத்தை மீண்டும்
பிலிப்பியர் சபைக்கு எடுத்துச் சென்றவரும் எப்பாப்பிரோதீத்து ஆவார், இந்த வசனங்களில்
பவுல்அவரது பண்புகளை விளக்குகிறார்.
இந்த கடினமான பணிக்காக அவர் தேவாலயத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதில் இருந்து
அவர் மக்களால் எவ்வளவு விரும்பப்பட்டார் என்பது தெரிகிறது. பவுல்
எப்பாப்பிரோதீத்துவினிடத்தில் அவர் மிகவும் பாராட்டும் குணங்களை கோடிட்டுக்
காட்டுகிறார்.
தீமோத்தேயுவை அவர்களிடம் அனுப்பப்படுவதற்கு முன்பு, பவுல் எப்பாப்பிரோதீத்துவை
அனுப்புவதாக இருந்தார்.
அவரும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் நம்பகமான ஒரு மனிதர். அவர் விசுவாசத்தில் ஒரு
சகோதரர். மற்றவர்கள் விரும்பாதபோது பவுலுடன் நின்று உண்மையாக அவரோடு
இணைந்து பணியாற்றினார்.
அவர் பிலிப்பி சபையில் ஊழியம் செய்து, அவர்களுடைய தூதராக நற்செய்தியைப்
பிரசங்கித்தார்.
எப்பாப்பிரோதீத்துவிடம் அவர் மிகவும் பாராட்டும் பண்பு அவருடைய உதவும் குணம் என்று
பவுல் கூறுகிறார்.
தேவாலயத்தின் மீது எப்பாப்பிரோதீத்து கொண்டிருந்த அன்பை பற்றி பவுல் பேசுகிறார்.
அவர் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் அவரது
உடல்நலக்குறைவை விட அவரது நோய் காரணமாக சபையின் மக்கள் அதையரியப்படுவதை
குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தார்.
அவர் தேவாலயத்தின் தேவைகளை தனது தேவைகளுக்கு மேல் வைத்தார்.
எப்பாப்பிரோதீத்து பிலிப்பிக்குத் திரும்புவது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று
பவுல் அறிந்திருந்தார். பவுலுக்கு அவரை பெரிதும் இழந்தாலும், அவர் திரும்பி வருவதும்
பவுலுக்கு ஊக்கத்தையும் அளித்தது.
அவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ அதேபோல எப்பாப்பிரோதீத்துவையும்
பெறுவார்கள் என்று பவுல் எதிர்பார்த்தார். இங்கு மனக்கசப்போ அல்லது கோபத்திற்கோ
இடமில்லை.
தீமோத்தேயுவோ பவுலோ அங்கு சென்றிருந்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்
ஆனாலும் சபையின் ஊழியம் ஒரு தனிநபரின் வரங்களாலோ அல்லது பங்களிப்புகளாலோ
மட்டுமே தங்கியுள்ளது என்று நாம் ஒருபோதும் கருதக்கூடாது. நற்செய்தியின் வேலை நம்மில்
எவரையும் விட பெரியது.
நம் வாழ்க்கையில் கர்த்தரின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து உங்கள் இடத்தில் இருப்பதற்கான
மகத்துவத்தை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
நீங்கள் விரும்பும் நன்றியை நீங்கள் பெறாமல் போகலாம், ஆனால் நீங்கள் நம்புவதை விட
உங்கள் விசுவாசம் அதிகம் பெரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உங்கள் வெவ்வேறு வடிவங்களின் பங்களிப்புகளிலிருந்தும் உங்களில் யாராலும் கற்பனை
செய்ய முடியாத அளவுக்கு உங்கள் விசுவாசத்திலிருந்தும் தேவாலயம் பெரிதும்
பயனடைகிறது.
இது நம் ஒவ்வொருவருக்கும் சவாலாகவும் நினைவூட்டலாகவும் செயல்படுகிறது.
துர்காரியம் என்னவென்றால், தேவாலயங்கள் குறிப்பிட்ட மற்றும் தனி குழுக்களாக
பிரிக்கப்படுகின்றன.
சிலர் உயர் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள், மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு
தவிர்க்கப்படுகிறார்கள்.
நாம் ஒவ்வொரு விசுவாசியையும் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும்
மற்றும் தேவாலயத்திற்கும், அதனுடைய வேலைக்கும் நன்மை பயக்கும் என்று உணர
வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினரையும் நாம் சரிசமமாக பார்க்க வேண்டும். எல்லோரையும் ஒன்று
போலவே பெற வேண்டும்.
நாம் கிறிஸ்துவின் மனதை உடையவர்களாக இருப்பதை பற்றி பவுல் பேசினார். அவர்
கிறிஸ்துவின் கீழ்ப்படிதலையும் அதைச் செய்வதற்கான நமது கடமையையும்
வெளிப்படுத்தினார். கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையை வடிவமைத்த இரண்டு அர்ப்பணிப்புள்ள
மனிதர்களின் உதாரணம் மற்றும் நினைவூட்டலுடன் பவுல் முடிக்கிறார்.
கிறிஸ்து சிலுவையை சுமந்து, நம் சார்பாக துன்பப்பட்டு மரணத்தில் வெளிப்படுத்திய
தியாகத்தை எப்பாப்பிரோதீத்து அவருடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். நாமும்
அத்தகைய உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வளர வேண்டும்.
ஜெபிப்போம்:
பரலோகத் தந்தையே, உங்கள் காரணத்திற்காகவும், நாங்கள் ஒருவருக்கொருவர்
இரக்கத்துடனும் உதவியுடனும் சேவை செய்யவும் உம்மிடம் எங்கள் வாழ்க்கையை
ஒப்படைக்க எங்களுக்கு உதவுங்கள். தீமோத்தேயு மற்றும் எப்பாப்பிரோதீத்துவை மாதிரிகளை
கொண்டு கிறிஸ்துவின் மனதை எங்களுக்குள் வளர்க்க உதவுங்கள். இயேசுவின் நாமத்தில்.
ஆமென்.