2டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா புதியதாக 'ழகரம்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.